DOWNLOAD FREE CSS TEMPLATES..IMAGES..SONGS..VIDEO..PICTURE..KAVITHAIGAL..GOOGLE GADGETS..JAVASCRIPT..VIDEO..GOOGLE..LAYOUT..LABELS..LINKS.. AND BACKGROUNDS

Ad Brite

Sep 6, 2009

பெண்ணே




நீ சேலையில் வருகிறாய் சாலையில் அனைவரும் சிலையாய் நிற்க

சேலை கட்டிக்கொண்ட சந்தோஷம் உன் முகத்தில்

உன்னை கட்டிக்கொண்ட சந்தோஷம் சேலையின் மிதப்பில்


இன்னும் எத்தனை இதயங்களை இலவம்பஞ்ச்சாக்கப்போகிறாய்,
உன் கொப்பளிக்கும் புன்னகையால் ..

போதும் பெண்ணே இனி இல்லை என்னிடம் இழப்பதற்கு இன்னொரு இதயம்.


உன் விழிகள் போடும் ஆட்டத்தில் அதிர்வதென்னவோ என் இதயம் தான்

அரை நிமிடத்தில் பதரவைத்துவிடுகிறாய் அருகே வரும்போதெல்லாம் ..


ஏன் உன்னை இப்படி நினைத்ததுதொலைக்கிறேன் என்னையும் மறந்து.

நான் என்னுடயது என்று நினைத்திருந்த ஒன்றயும் உன் பின்னே அழைத்துச்சென்றுவிட்டாய், இங்கே என்னை புலம்ப வைத்துவிட்டு..

Sep 5, 2009

கத்திசண்டை

ஏன் என் கண்களோடு இந்த கத்திசண்டை..

பின் என் கண் பட்டதால் தான் காயம் வந்தது என்று குறை சொல்வாய்..

நன்றாக பார் காயம் வந்ததா இல்லை

காதல் வந்ததா என்று..!!

Aug 25, 2009

சேலை



நீ

சேலை கட்டி வரும்போது தான்

எனக்கு பயமாய் இருக்கிறது ..!!

எங்கே சேலையும் என்போல் சரிந்து விடுமோ என்று !!

Aug 20, 2009

நிறைவேற்றப்படுமா..!!


நேற்று பூக்களின் மாநாடு..

பெண்களின் கூந்தலில் கட்டாயம் இரண்டு சதவிகிதம் இடஒதுக்கீடு கோரி தீர்மானம்..!!

பூக்களின் கலவரம்



பூக்களுக்குள் நேற்று கலவரம்..

அவள் கூந்தலில் இரண்டு மலர்களுக்கு மேல் இடமில்லை என்றதால்..!!

Aug 19, 2009

காத்திருக்கிறேன்



என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான் என்று சொல்லடா என..!!

சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது..!!

Aug 14, 2009

இதய கடிகாரம்


நீயென்ன
என் இதய கடிகாரத்தின் முட்களா
நீ இன்றி இயங்க மறுக்கிறது என் இதயம்..!!

Aug 12, 2009

இதயம்



அவளை மட்டுமே நினைத்து துடித்துக்கொண்டிருக்கும்

என் இதயத்திற்கு புரியவில்லை

அவளுக்கு இதயமே இல்லை என்று

Aug 9, 2009

நிலா



அன்று அமாவாசை

இருந்தும் நிலவைப் பார்த்தேன்

என் பேருந்தின் ஜன்னலோரமாய்..!!

Aug 8, 2009

கிறுக்கல்கள்

பெயர்


எத்தனையோ முறை தவற விட்ட புன்னகையை..

இன்று மொத்தமாய் உதிர்க்கிறேன்

அவள் பெயரை காணும் வழியெங்கும்..!!

Aug 7, 2009

பூ மழை



பூ மீது பூ மழை..

ஆடிக் காத்து இன்று தான் அர்த்தத்தோடு வீசியிருக்கிறது..!!

கண்ணே





கண்ணே போதும் நிறுத்திவிடு
இல்லையேல்
காதலெனும் வெள்ளத்தில் நீச்சல் அடித்துக்கொண்டிருக்கும் நான்
மூழ்கிவிடுவேன்..!!

Aug 6, 2009

வானவில்



ஒரு வெள்ளைக்காகிதத்தையும்

அத்தனை அழகாக்கிக்கொண்டிருந்தது அவள் பெயர்..

வானவில்லும் ஒளிந்திருக்குமோ

அவள் பெயரில்..!!

UNNAI MARAKKA NINAITHA NERAM

Aug 5, 2009

காதல்

காதலும் கடவுளும்



அர்த்தம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
அலைமோதவைப்பது காதல்..

ஆதாரம் இல்லாமலே அத்தனை மனங்களையும்
ஆட்சி செய்வது கடவுள்..

இரண்டுமே அர்த்தமில்லாதது..!!

இதய சுவர்கள்



என் இதய சுவர்களில்

இன்றும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறது

பிரியும் முன் நீ பேசிச் சென்ற வார்த்தைகள்..!!

Aug 4, 2009

தேனீ


உனக்காகவே பிறந்தேன்..

உனக்காகவே வளர்ந்தேன்..

உனக்காகவே சாகிறேன்..

- தேனிடம் வண்டு

Aug 3, 2009

நல்லபெயர்கள்


ஞாபகத்துக்கு வராத அனைத்துப் பெயர்களும்

நல்லபெயர்கள் தான்..

Freshers World