DOWNLOAD FREE CSS TEMPLATES..IMAGES..SONGS..VIDEO..PICTURE..KAVITHAIGAL..GOOGLE GADGETS..JAVASCRIPT..VIDEO..GOOGLE..LAYOUT..LABELS..LINKS.. AND BACKGROUNDS

Ad Brite

Jul 29, 2009

கவிதையாகிய அவள் விழி..




கவிதை கண்டேன் உன் கருவிழியில்,

இனி கலங்காதே..நீ கலங்கினால்..

கவிதையுடன் என் இதயமும் நனைந்துவிடும்..!!

Jul 28, 2009

இதய தேவதை



நாளை வரப்போகும் என் இதய தேவதைக்காக..
நான் என்றோ வாங்கி வைத்த மெத்தையும் ,தலையணையும் ,மிக்ஸியும் ,க்ரைண்டரும் என்னைப் பார்த்து ஏக்கத்தோடு கேட்கிறது எப்போதடா அழைத்து வருவாய்
எங்களுக்கு உயிர் கொடுக்கப்போகும் தேவதையை என்று..!!

தன்னம்பிக்கை



பத்து முறை விழுந்தவனை பூமித்தாய் முத்தமிட்டு கேட்டாளாம்..
நீ தானேயடா,
ஒன்பது முறை விழுந்தும் எழுந்து நின்றவன் என்று...!!

என் வீட்டு மலர்கள்




என் வீட்டு மலர்களுக்குத்தான் அவள் மேல் எத்தனை காதல்..
நான் என்றோ சொன்ன வார்த்தையைக்கேட்டு
அவள் கூந்தலோடு வாழ்ந்துவிட்டு தான் சாவேன் என்று இன்றளவும் வாடாமல் காத்திருக்கிறது..!!

ராமன்..ராவணன்..



எங்களுக்காக போட்டியிட்டு மணமுடிக்க ராமன் வராவிட்டாலும்..
கடத்திக்கொண்டு போக ராவணனாவது வரமாட்டானா
என ஏங்கும் செவ்வாய் தோஷக்கன்னிகள்..!!
>

அன்றில் பறவை



அழகாய் அவசரமாய் ஒரு கவிதை சொல்ல முற்பட்டு அவள் கண்களை பார்த்தேன்..
வெண் மேகத்தில் சிகப்பு மின்னல்கள்,
அதனோடு அன்றில் பறவை போல் அவள் கருவிழிகள் அங்கும்மிங்குமாய் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன..!!

தண்ணீரையும்


தண்ணீரையும் கைகளால் அள்ளலாம்
அது பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருந்தால்

திருவிழா



திருவிழாவுக்கு அனைவரும் தந்தையையும் தாயையும் அழைத்துக்கொண்டுவர,

நீ மட்டும் தானேயடி

திருவிழாவையே அழைத்ததுக்கொண்டு வந்தாய்..!!

Jul 27, 2009

இதய சீஸ்மோகிராப்

நீ எங்கோ ஒரு சாலையில் அடியெடுத்து
வைக்கும்போதே..
என் இதய ஸீஸ்மோகிராப்ஃபில்
அழகான கீறல்கள்
பதியத் தொடங்கிவிடுகின்றன..!!

Jul 26, 2009

வளர்ச்சியா? வீழ்ச்சியா?


நம் வாழ்வில் தாயாய், தங்கையை, தலைவியாய், துணைவியாய்..அத்துனை சந்தர்ப்பங்களிலும் நம்மோடு பயணிக்கும் பெண்கள்

இன்று..

கள்ளச் சந்தையில்
சாராயம் விற்பவர்கள்
பெரும்பாலும் பெண்கள்

வரதட்சனை வழக்குகளில்
முதன்மை குற்றவாளிகள்
பெரும்பாலும் பெண்கள்

பெண்களைக் கடத்தி வந்து
சதைத் தொழில் நடத்துவது
பெரும்பாலும் பெண்கள்

சீர்திருத்தப் பள்ளிகளில்
சிறுவர் சேரக் காரணம்
பெரும்பாலும் பெண்கள்

குழந்தைகளைக் கொன்று
தற்கொலைக்கு முயல்வது
பெரும்பாலும் பெண்கள்

ரங்கநாதன் தெருக்கடையில்
பொருட்களைத் திருடுவது
பெரும்பாலும் பெண்கள்

சபலபுத்தி இளைஞர்களை
இணைய தளத்தில் ஏய்ப்பது
பெரும்பாலும் பெண்கள்

ஏல சீட்டு நடத்தி
பணத்தோடு மறைவது
பெரும்பாலும் பெண்கள்

மனித வெடிகுண்டாய் ஒரு பெண்;
தொடர் குண்டு வெடிப்பில்
தொடர்புடைய ஒரு பெண்;

தமிழக காவல் துறையை
ஒரு கலக்கு கலக்கிய
மோகினியாக ஒரு பெண்

சர்வோதயா பள்ளியில்
மாணவிகளை சீரழித்த
ஆசிரியையாக ஒரு பெண்

இதோ புறப்பட்டு விட்டாள்., உறவுகளை உடைத்ெரிய..பாசத்தை பிறித்தெடுக்க..
ஆணின் துணை இன்றி
பிள்ளை பெற்றெடுக்க

சரிநிகர் சமானமாக
ஆணுடன் போட்டி போட்டு,
மெதுவாக பெண்கள்

தங்கள் பெண்தன்மையை
இழந்து கொண்டிருப்பது
வளர்ச்சியா? வீழ்ச்சியா?

வறுமை...

தரையில் படுக்க வைத்தால்
குழந்தைக்கு வலிக்குமே என்று
தன் மார்பின் மீது
படுக்க வைத்துக்கொண்டாள்
அந்த தாய்...
இருந்தும் குழந்தை அழுதது...
தாயின் மார்புக்கூடு குத்தியதால்...
சதையே இல்லாத மார்பில்
பால் மட்டும் எப்படி சுரக்கும்...???

தேவதையின் குணங்கள்..


உன்னை மார்பில் சாய்த்தபடி...
குளிர் இரவுகளை கழிக்க வேண்டும்...
உன் மடியில் சாய்ந்தபடி....
என் மரணம் வரை உறங்க வேண்டும்...

உன் கண்களில் வெளிச்சம் இருக்கும்தானே...
உன்னை பார்த்ததும் கவிதைகள் பிறக்கும்தானே...
உனக்குள்ளும் இத்தனை காதல் இருக்கும்தானே...
நிச்சயம் இருக்கும்...
இவை தேவதைகளுக்கான குணங்கள்...
உனையன்றி யார் பெற்றிருப்பார்...

உன் வெட்கம் ரசிக்க.. காத்திருக்கிறேன்..

உன் பெயர் என்னவென்று தெரியாது...
நான் வளர்க்கும் பறவைகளிடம்...
தேவதை என்றே சொல்லி வைத்திருக்கிறேன்...

நீ வீடு வரும் நாளில்...
நான் சொல்லாமலே எல்லா பறவைகளும்...
கத்தப் போகின்றன... தேவதை தேவதை என்று...
காத்திருக்கிறேன்... உன் வெட்கம் ரசிக்க.. !!

தேவதை

என் தோட்டம் முழுக்க ரோஜா செடிகள்தான்...

முதல் முதலாய் பூத்த பூக்களிடம் சொன்னேன்...

உங்களை தொட்டுப் பறிக்க...

தேவதை ஒருத்தி விரைவில் வருவாள் என...

அத்தனை பூக்களும் வாடாமல் காத்திருக்கிறது...

காதல் கணக்குகள்

லாபக் கணக்குகளை
போட்டு முடிப்பதற்குள்
நஷ்டம் வந்து விடுகிறது
காதலில்...

நேற்றைய அவளின் சிரிப்பை
முழுவதுமாய் ரசித்து முடிக்கும் முன்
இன்று முறைத்து விட்டு
போகிறாள்..

சந்தோஷ கனவுகளை
கவிதை ஆக்குவதற்குள்
சோகத்தை என் முன்
கொட்டி விட்டு போய் விடுகிறாள் ...!!

இதயத்தழும்புகள்


உன் நினைவுகளே வேண்டாம் என்று

என் இதய சுவர்களில் மாட்டி இருந்த

உன் புகைப்படங்களை தூக்கி எறிந்தேன்...

ஆனால் இன்னும் வலித்துக்கொண்டுதான் இருக்கிறது

உன் புகைபடங்களை மாட்டி வைப்பதற்காக

அடிக்கப்பட்ட ஆணிகளின்

தழும்புகள்..

என் கவிதைகள் ..

எனதல்ல என் கவிதைகள் .....
என்னவளின்
கண் மொழி,
சைகை மொழி,
பேச்சு மொழி,
இன்னும்
எங்களுக்குள்ளான,
நிறைய ரகசிய
மொழிகளின்
அரைகுறையான
மொழி பெயர்ப்புகளே
என் கவிதைகள்...!!

தேவையின் தேவதை !!


என் தேவைக்கு தேடினேன்..

தேவதையாக இருக்கும் உன்னை..

நீயும் தேவதையாக தான் இருந்தாய்..

உன் தேவைகள் தீரும் வரை...!!

புன்னகை

ஆயிரம் உறவுகள் என்னை சூழ்ந்திருந்த போதும்.,

உன் புன்னகைக்காக ஏங்கும் என் இதயத்தை பார்த்து,

ஏளனமாகவாவது சிரித்து விட்டு போ..

என்னுள்ளே நீ இருப்பதனால்


என்னை விட உன்னை நேசித்தேன்..

உன்னை விட இன்று என்னை நேசிக்கிறேன்..

என்னுள்ளே நீ இருப்பதனால்..!

கண்ணீர்



கண்ணீரை ரசித்தேன்,

கன்னத்தில் ஆனந்தமாய் என்னோடு விளையாடியபோது..

அதே கண்ணீரை இன்று வெறுக்கிறேன்,

உன் கண்களில் பார்த்தபோது..!!

தோல்வி




எத்தனை முறை பார்த்தாலும் தோற்று போகிறேன்..

அவளின் ஒரே பார்வையில் ..!!

தவிப்பு


உன்னிடம் பேசும்போது மட்டும் தான்,

என் தமிழும் தலையில் தட்டுகிறது..

இன்றாவது திருந்த பேசு என்று ..!!

காதலின் ஒத்திகை


ஒத்திகை பார்த்தேனடி
இன்றாவது உன்னிடம் சொல்லிவிடலாம் என்று
உதிரவில்லையடி என் வார்த்தைகள்..உன் அருகே வந்தவுடன்!!

காதல்


நான் இறப்பதையும்
நேசிப்பேன்..

அது உனக்காக‌
என்றால்..

மல்லிகை


நீ நடந்து சென்ற சாலையில் ஏதடி மல்லிகை கோலம்..!!

Freshers World