நீ சேலையில் வருகிறாய் சாலையில் அனைவரும் சிலையாய் நிற்க
சேலை கட்டிக்கொண்ட சந்தோஷம் உன் முகத்தில்
உன்னை கட்டிக்கொண்ட சந்தோஷம் சேலையின் மிதப்பில்
இன்னும் எத்தனை இதயங்களை இலவம்பஞ்ச்சாக்கப்போகிறாய்,
உன் கொப்பளிக்கும் புன்னகையால் ..
போதும் பெண்ணே இனி இல்லை என்னிடம் இழப்பதற்கு இன்னொரு இதயம்.
உன் விழிகள் போடும் ஆட்டத்தில் அதிர்வதென்னவோ என் இதயம் தான்
அரை நிமிடத்தில் பதரவைத்துவிடுகிறாய் அருகே வரும்போதெல்லாம் ..
ஏன் உன்னை இப்படி நினைத்ததுதொலைக்கிறேன் என்னையும் மறந்து.
நான் என்னுடயது என்று நினைத்திருந்த ஒன்றயும் உன் பின்னே அழைத்துச்சென்றுவிட்டாய், இங்கே என்னை புலம்ப வைத்துவிட்டு..
Horoscope

Sep 6, 2009
பெண்ணே
Posted by SURYAN at 12:41 PM
Labels: kadhal, kavidhaigal, kavithai, love
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment